பாருங்கள் என் மனைவியின் நடத்தையை..! புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட கணவன்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததாக நினைத்து கணவன் கொலை செய்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு சமீலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் வழக்கம் கொண்டவர்.

இதனிடையே விஜயவாடாவிலியே இருந்த இவரது மனைவி வேறு சிலருடன் தொடர்பில் இருப்பதாக சமீலுவுக்கு தகவல்கள் கிடைத்தன. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன.

2 நாட்களுக்கு முன்னர் கணவன்-மனைவி இடையே இதே விவகாரத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் சமீலு கடும் கோபமடைந்தார். ஆத்திரம் தலைக்கேறியதால் தன்னிடமிருந்த கத்தியால் தன் மனைவியை குத்திக்கொலை செய்துள்ளார்.

கொன்ற உடனே விஜயவாடா காவல்நிலையத்திற்கு சென்ற சமீலு தன் மனைவியை கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோன்று தன் மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பிலிருக்கும் புகைப்படங்களை காவல்துறையினரிடம் காண்பித்துள்ளார்.

வேறு நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.