ஒரு மாத காலமாக காணாமல் போனதாக காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்த நபர் ஆற்றுக்கு அருகே சடலமாக கிடந்த சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றங்கரையில் துண்டு துண்டாக கிடந்த கணவன் சடலம்..! நமீதாவிடன் நடந்த விசாரணையில் தெரிய வந்த உண்மை!
ஒடிசா மாநிலத்தில் கட்டாக் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பினோத் மண்டல் என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சென்ற ஆண்டு நமிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நமிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு ஆண் நண்பருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கணவர் இருக்கும் வரை கள்ளக்காதலனுடன் நெருங்க இயலாது என்பதை புரிந்துகொண்ட நமிதா அவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கள்ளக்காதலனுடன் இணைந்து சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று பினோத் மண்டலை கொலை செய்தனர். அவருடைய உடலை பல பாகங்களாக வெட்டி மகாநதி ஆற்று பாலத்திற்கு கீழே போட்டுள்ளனர்.
இதற்கிடையே சென்ற மாதம் இறுதியில் பினோத் காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு கீழே பிணம் ஒன்று இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்தினர்.
அப்போது நமீதா இறந்தவரின் சடலம் தன்னுடைய கணவர் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் நமீதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்ட போது, ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். கொலை குற்றத்திற்காக நமீதாவை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது கட்டாக் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.