புருசன் நான் இருக்கும் போது வெளியூரில் எவன் கூடடி? பேக்கரி விஜயாவை பட்டப்பகலில் கணவன் செய்த சம்பவம்!

மனைவியின் நடத்தையை சந்தேகித்த மாணவர் மாறுவேடம் அணிந்து அவரை கொலை செய்து சம்பவமானது திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் விஜயா. விஜயா அடிக்கடி வெளிமாவட்டம், வெளியூர், வெளிமாநிலம் என்று பல்வேறு இடங்களில் வேலை செய்து வருவதை வழக்கமாக கொண்டார். 

சமீபகாலமாக திருக்கோவிலூர் மணலூர்பேட்டையில் அமைந்துள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விஜயா தன்னுடைய வெளியூர் பயணங்களை குறித்து கணவரிடம் ஒரு போதும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனால் விஜயாவின் நடத்தை மீது அவருடைய கணவருக்கு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. 

இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அப்போதுகூட விஜயா தன்னுடைய பயணங்கள் குறித்து சரவணனிடம் கூறவில்லை. ஆத்திரமடைந்த சரவணன் விஜயாவை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதன்படி, விஜயா பணிபுரிந்து வரும் பேக்கரிக்கு செக்யூரிட்டி உடையில் சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி முகக்கவசம், தலையில் தொப்பி என்று அடையாளம் தெரியாதவாறு பேக்கரிக்கு சென்றுள்ளார். தக்க சமயம் பார்த்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அவர் கொலை செய்யும் காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் தெளிவாக இடம்பெற்றுள்ளன.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சரவணனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.