திருமணத்திற்கு பின்னர் என்னுடைய மனைவி ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த கணவர் செய்த செயலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமணமான 10 நாளில் கணவனுக்கு டாடா..! தோழியுடன் ஓட்டம் பிடித்த புது மனைவி! காரணம் ஓரினச்சேர்க்கை! எங்கு தெரியுமா?
வட இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இங்கு பூஜா குமார் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவருடைய தோழியின் பெயர் சப்னா வர்மா. இருவரும் பல வருடங்கள் தோழிகளாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறியுள்ளனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் நிச்சயமாக ஒன்றுசேர விடமாட்டார்கள் என்ற அச்சத்தில் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சமீபகாலத்தில் பூஜாவை அவருடைய குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். அதன்படி பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கித் என்பவருடன் பூஜாவுக்கு திருமணத்தை செய்து முடித்துள்ளனர். திருமணமானவுடனே சப்னாவுடன் தன்னுடைய உறவு குறித்து பூஜா அங்கித்திடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
முதலில் அங்கித் ஓரளவுக்கு ஆதரவாக பேசி இருந்தாலும், அதன் பின்னர் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு பூஜாவை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் திருமணமான 10 நாட்களிலேயே பூஜா வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதன்படி சப்னாவை தேடி சென்ற பூஜா, அவருடன் இணைந்து கொண்டு தனிவீட்டில் வாழ தொடங்கினார். அங்கித் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் பூஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அறிவுரை கூறினர். ஆனாலும் பூஜா தன்னுடைய நிலையை மாற்றி கொள்ளவில்லை. ஆனால் எதிர்பாராவிதமாக, அங்கித் பூஜாவை சப்னாவிடம் ஒப்படைத்துவிட்டு காவல்நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.