தி.மு.க. என்பதே குடும்ப அரசியல் என்பதும் பண்ணையார்த்தனம் போன்று ஒரே நபர் காலம் காலமாக மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என்று பழம் தின்று கொட்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.
அதனை உண்மை என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் தி.மு.க.வின் பொருளாளர் துரை முருகன். இந்த முறை துரைமுருகன் சட்டசபைக்குப் போட்டியிடாமல், இளைஞர் ஒருவருக்கு வழி விட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.
சென்னை, பெரவள்ளூர் சதுக்கம் அருகே, நேற்று முன்தினம் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:தலைவர் மகன் என்ற தனிச்சலுகை பெற்று, தலைவராக வேண்டும் என, முயற்சித்தவர் அல்ல ஸ்டாலின்.'என்னால் கூட ஸ்டாலின் அளவிற்கு சுற்று பயணம் செய்ய முடியவில்லை' என, ஸ்டாலினை புகழ்ந்தார் கருணாநிதி.தி.மு.க., தலைவர் என்ற நிலையில் இருந்து அதிர வைத்ததால், டில்லி பயப்படுகிறது. இல்லையேல், தி.மு.க.,வை இந்த அளவிற்கு, அமித் ஷா விமர்சித்து இருக்க மாட்டார். கருணாநிதி, 1971ல் வெற்றி பெற்ற தொகுதிகளை விட, ஒரு தொகுதியாவது அதிகம் வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு, ஸ்டாலின் செயல்படுகிறார்.
என்னோடு தோழனாக இருந்தவர், இப்போது, என் தலைவராகி இருக்கிறார். நேற்று கருணாநிதி அமைச்சரவையில் இருந்தேன்; நாளை ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன்; அதற்கடுத்து உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தும் இன்னமும் இப்படி பதவி வெறியுடன் இருக்கிறாரே என்று உடன்பிறப்புகள் கொதிக்கிறார்கள்.