இந்த போட்டியிலாவது வெல்லுமா கோஹ்லி அணி? பலம் வாய்ந்த கொல்கத்தாவுடன் மோதும் RCB!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவுள்ளது.


இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பலம் வாய்ந்த அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடர் தோல்வியை சந்தித்து வரும் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணி மோதவுள்ளது. பெங்களூரு அணியில் நிறைய நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாதது அந்த அணியையும், அந்த அணியின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.