தமிழ்நாட்டில் பீச்சங்கையால் சாப்பிடுபவர்கள் தான் அதிகம்! வாய் கொளுப்பு எஸ்வி சேகர் கிண்டல்!

தமிழகத்தில் பீச்சங்கையால் சாப்பிடுபவர்கள் தான் அதிகம் இருப்பதாக நடிகர் எஸ்வி சேகர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.


சென்னையில் பிராமணர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நடிகர் எஸ்.விசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். மாநாட்டில் கலந்து கொண்டு எஸ்வி சேகர் பேசியதாவது:

முன்னேறிய ஜாதியிலும் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள். ஏன் பிராமணர்களில் ஏழ்மையில் யாரும் இல்லையா? பிற ஜாதிகளில் தான் ஏழைகள் உள்ளனரா? எனவே முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் Rightist சிந்தனை அதாவது வலதுசாரி சிந்தனை இல்லை. அது ஆரம்பம் முதலே இல்லாமல் போயிவிட்டது. ஆனால் leftists சிந்தனை அதாவது  இடதுசாரி சிந்தனை மட்டுமே உள்ளது. இதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் பீச்சங்கையால் சாப்பிடுபவர்கள் தான் அதிகம் என்பது போல் தெரிகிறது.  தமிழகத்தில் 40 லட்சம் பேர் பிராமணவர்கள் உள்ளனர். இவ்வாறு எஸ்வி சேகர் பேசினார்.