இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பிரித்தானிய நாட்டில் பிரசவத்தின் போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் அழகான குழந்தையை பெற்றெடுத்த இந்தியப் பெண்! அடுத்த நிமிடமே துடிதுடித்து பலியான விபரீதம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!
பிரித்தானிய நாட்டில் இளம் பெண் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவமானது மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த இளம்பெண் பெயர் ரவீனா. இவர் சாகர் பகவான் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிரித்தானியா நாட்டிற்கு சென்று விட்டார். இவர் பிரித்தானிய நாட்டில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.
இவருக்கு சன்வி என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரவீனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். பிரசவத்திற்காக வேல்சின் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு பிரசவத்தின்போது அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
அழகான ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை அனுபவித்த சில நிமிடங்களிலேயே பிரவீனா திடீரென்று இறந்திருக்கிறார் . குழந்தை பிறந்த சந்தோஷம் சில நிமிடங்கள் கூட அவரது குடும்பத்தில் நீடிக்க வில்லை மாறாக பெரும் சோகம் ரவீனாவின் இறப்பின் மூலம் தாக்கியுள்ளது .
ரவீனா இறந்ததற்கான சரியான காரணங்கள் எதுவும் மருத்துவர்கள் அவரது கணவரிடம் கூறவில்லை. இது இன்னும் மிகப்பெரிய சோகத்தை அவர்களுக்கு தந்துள்ளது. ரவீனாவின் உயிர் பிரியும் போது ரவீனாவின் தாய் மற்றும் அவரது கணவருடன் இருந்திருக்கின்றனர்.
கடந்த 28ம் தேதி ரவீனாவிற்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரவீனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.