வெளிநாட்டு சாஃப்ட்வேர் என்ஜினியருடன் சல்லாபம்! நடிகை நிலானிக்கு வந்த புது பிரச்சனை!

சீரியல் நடிகை நிலானி குமார் தன்னை சம்பந்தம் இல்லாத நபர்கள் அழைப்பதாகவும், தன் போனை யாரோ ஹேக் செய்து விட்டதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சின்னத்திரை உலகில் வில்லியாக வலம் வந்தவர் நடிகை நிலானி. இவர் சமீபத்தில் தவறான நிகழ்வுகளுக்காக தொலைக்காட்சிகளில் பேசப்பட்டு வந்தார். இவர் ஒருவருடன் "லிவிங் டு கெதர்" ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். அவர் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவரும் அந்த நபரும் நடத்திய ஆபாச உரையாடல்கள் அனைத்தும் வெளிவந்தன. இதற்கிடையே நிலானி காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்." அதாவது எனக்கு நேர்ந்த பிரச்சனைகளால், என் வாழ்வாதாரம் அடிபட்டு போனது. இந்த நிலையில் எனக்கு உதவிக்கரம் நீட்டினார் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.

வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் அந்த நபர் என்னை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். எனக்கும் அவரை பிடித்திருந்தது. இதனால் இருவரும் நெருக்கமாக பழகினோம். பிறகு கல்யாணம் என்று அவர் மீண்டும் பேச்சை எடுத்தார்.

வேறுவழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டேன். அவர் கல்யாணத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மேலும் கல்யாணத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தார். இதனால் நான் அவரை சந்தேகித்தேன். பின்னர் அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது தெரியவந்தது.

பின்னர், சமூக வலைத்தளங்களில் அவர் என் மொபைல் எண்ணை பகிர்ந்துள்ளார். முன்பின் சம்பந்தம் இல்லாத நபர்கள் என்னிடம் உரையாடுகின்றனர். என் போனை யாரோ ஹேக் செய்து விட்டார்கள்" என்றும் புகார் அளித்தார். என்னுடைய செல்போனில் இருந்து புகைப்படங்கள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு நிலானி கூறியுள்ளார்.

இதனிடையே கணவனை பிரிந்து பிறகு காதலனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் வெளிநாட்டு இளைஞர் ஒருவருடன் நிலானி நெருக்கமானதாகவும் தற்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர் இப்படி ஒரு நாடகம் போடப்படுவதாகவும் இந்த சம்பவமானது சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.