ஒரே நேரத்தில் 15 பாலிஸ்டிக் ஏவுகணை பாய்ந்தது! ஈரானின் அதிரடி பதிலடியால் பலியான 80 அமெரிக்க வீரர்கள்! பதற்றத்தில் வளைகுடா!

ஈராக் நாட்டில் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சில நாட்களுக்கு முன்னால் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் போர் தளபதியான சுலைமானி கொல்லப்பட்டார். நேற்று ஈரானில் சுலைமானியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கூட்ட நெரிசலின் காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

அதற்கு பழிவாங்கும் விதமாக அடுத்த சில மணி நேரத்திலேயே ஈரான் நாடு ஈராக்கிலுள்ள அமெரிக்கா இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் நாட்டில் அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த அயின் அல் அஸாத் விமான தளம் மற்றும் அபிரில் எனும் பகுதியில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி ஈரான் புரட்சிகர அமைப்பினர் 15 பிளாஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து ஈரான் நாட்டின் பிரெஸ் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 15 ஏவுகணைகளும் 2 படைத்தளங்களை துல்லியமாக தாக்கிய வீடியோக்களையும் அந்த தொலைக்காட்சி நிறுவனமானது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 80 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் முக்கிய அமைச்சர்கள் அதிபர் டிரம்ப்புடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிபர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,  "ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மை. பலியானவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை சேகரித்து வருகிறோம். அமெரிக்கா நாட்டிடம் புதிய இராணுவமானது மற்ற நாடுகளால் ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு பயங்கரமானது" என்று கூறினார். 

இந்த சம்பவமானது ஈராக் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.