கொரானா வைரஸ் காலர் ட்யூனை ஸ்கிப் அல்லது OFF செய்வது எப்படி? எளிமையான வழிமுறை உள்ளே!

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை ஸ்கிப் செய்வது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 4,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,14,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 50 பேர் கடுமையாக பாதித்துள்ளனர்.

அரசாங்கம் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய பங்கிற்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கால் செய்த முதல் 30 வினாடிகளுக்கு தொடங்கும் விழிப்புணர்வு ட்யூண் கேட்கும். அதன் பின்னர் தான் அழைப்பு செல்லும்.

ஒவ்வொரு முறையும் இதுபோன்று கேட்பதற்கு பொதுமக்களுக்கு எரிச்சலாகி வருகிறது. ஆனால் இதனை முற்றிலும் நிறுத்த இயலாது. மாறாக ஸ்கிப் செய்து கொள்ளலாம். 

அதாவது, "முதலில் அழைப்பு செல்வதற்கான எண்ணை பதிவு செய்யுங்கள். கால் செய்த பிறகு அந்த காலர் டியூன் ஒலிக்க தொடங்கும். அப்போது உடனடியாக 1 அல்லது # அமுக்குங்கள். கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் கட்டாகிவிடும். உடனடியாக அழைப்பிற்கும் சென்றுவிடும்". 

இந்த முறையில் அணைத்து செல்போனில் எண்களுக்கும் பயன்படுத்த இயலாது. அரசு மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் நோக்கமானது விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே. ஆனால் மக்களை அச்சுறுத்தும் போது இதுபோன்ற வழிகளை கடைப்பிடித்து கொள்ளலாம்.