46 வயது பிரசாந்துக்கு ஓகே சொன்ன 49 வயது ரம்யா கிருஷ்ணன்..! எதுக்கு தெரியுமா?

பாலிவுட் வெற்றி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது தெரியவந்துள்ளது.


பாலிவுட் திரையுலகில் "அந்தாதூன்" என்ற திரைப்படம் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதியன்று வெளியானது. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது  குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் மெச்சிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கதை ஆகிய விருதுகளும் இந்த படத்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்வதற்கு கடுமையான போட்டி நிலவியது. கடும் போட்டியில் மத்தியில் நடிகர் தியாகராஜன் இந்த படத்தின் ரீமேக்குக்கான உரிமைகளை பெற்றார். ஹிந்தி திரைப்படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குரான் கதாபாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஜெயம் ரவியின் சகோதரரான மோகன் ராஜா இயக்கவுள்ளார் என்பதும் படத்தின் அடுத்த முக்கிய வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் திரைப்படத்தில் நடிகை தபு நடித்திருந்த கதாபாத்திரத்தில், தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.