டெபாசிட் வாங்குறதே கஷ்டம்... எல்லாம் போச்சு _- ஸ்டாலினை மிரள வைத்த கூட்டணி கட்சித் தலைவர்.

ஒருசில கருத்துக்கணிப்புகளைப் பார்த்து, அடுத்த ஆட்சி நமக்குத்தான் என்று தெம்புடன் இருக்கும் ஸ்டாலினுக்கு டென்ஷனைக் கொடுத்திருக்கிறார் ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர்.


‘ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வுக்கு சனி ஒவ்வொரு ரூபத்தில் வரும். இந்த தேர்தலில் அது ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி, தயாநிதி மாறன் ரூபத்தில் வந்துருக்குது’ என்று கூட்டணிக் கட்சி தலைவர் பதறி வருகிறார்.

அவர் மேலும் பேசுகையில், ‘மக்களிடம் அதையும், இதையும் சொல்லி எப்படியாவது ஆட்சியைப் பிடிச்சுடலாம்னுதான் ஸ்டாலின் விடாம பிரச்சாரம் செஞ்சுகிட்டு இருக்கிறார். ஆனால், அதிர்ஷ்டம் சைக்கிளில் வந்தா... துரதிர்ஷ்டம் ராக்கெட் வேகத்துல வந்து அவரைக் கவுத்துடுது. இந்த தேர்தலிலாவது எப்படியாவது ஜெயிச்சி முதல்வராகிடலாம்னு கனவு கண்டார்.

ஆனால், வழக்கமாக ஆளும் கட்சியை அசரடிக்கும் எதிர்ப்பலை எதுவும் எடப்பாடி அரசுமீது இல்லை. மக்களிடம் ரொம்ப இணக்கமா எடப்பாடி மேற்கொள்கிற பிரசாரம் நல்லாவே எடுபட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் பிரசாரம் அந்தளவிற்கு ரீச் ஆகல.

போதாதற்கு பெண்கள் வாக்குகள் மற்றும் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கக்கூடிய நடுநிலை வாக்காளர்களின் மன நிலையும் திமுகவினரின் ஆபாச பேச்சுக்களால் திசைமாறிவிட்டது. வழக்கம்போல் ஸ்டாலினுக்கு பட்டை நாமம்தான்’’ என்று ஓப்பனாக அவர் பேசியது, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சித் தலைவர்களும் தெரிய வந்ததில், அவர்களும் செம அப்செட்டாம்.