கண்ணீர்விட்டு கதறிய கே.எஸ்.அழகிரி... தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடருமா..?

இன்றைய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தங்களுக்கு குறைந்த தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்ட சம்பவம் கதர் தொண்டர்களை அதிர வைத்துள்ளது.


கடந்த 2016-ஆம் ஆண்டு 41 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் வெறும் 8 இடங்களில்தான் வென்றது. இதனால், திமுக 89 தொகுதிகளை வென்ற நிலையிலும், அதிமுகவில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டபோதும், திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 

தற்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருப்பதால் குறைந்தது 24 இடங்களை வென்றால்தான் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பு இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கணக்கிடுகிறார்கள். அதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. 

ஆனால் 22 தொகுதிகளுக்கு மேல் கொடுப்பதற்கு தி.மு.க. விரும்பவில்லை என்று மேடையில் கண்ணீர் விட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி. எனவே தொடர்ந்து தி.மு.க.வில் நீடிப்பதால் எந்த பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. 24 தொகுதிக்கு மேல் தரவில்லை என்றால் வெளியேறலாம் என்று கதர் தலைவர்கள் கூறிவரும் கருத்து தி.மு.க.வை அதிர வைத்துள்ளது.