கவின் - லாஸ்லியா பிரேக் அப்..! பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நேருக்கு நேர் கூட பார்க்காத பிடிவாதம்! காரணம் என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டத்தின்போது பங்கேற்ற கவின், லாஸ்லியாவை திரும்பி கூட பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மிகக் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் மிகவும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது காதலை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர் என்று கூட கூறலாம். இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லாஸ்லியாவின் பெற்றோர்கள் இலங்கையிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அப்போது வந்த அவர்களுக்கு கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் காதலிப்பது பிடிக்கவில்லை என்று அவர்களது செய்த செயலின் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த லாஸ்லியா தன்னுடைய பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயம் கவிணை திருமணம் செய்து கொள்வேன் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கொண்டாடுவதற்காக பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். இதுவரை இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படாத நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் போட்டியாளர்களின் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் மற்றும் லாஸ்லியாவை பற்றிய தகவல்களும் சமூக வலைத்தளத்தில் தற்போது பரவி வருகிறது. அதாவது பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியாவை திரும்பி கூட பார்க்கவில்லையாம் கவின் . அதுமட்டுமில்லாமல் லாஸ்லியா உடன் இணைந்து இருக்குமாறு எந்த புகைப்படத்திலும் கவின் இடம் பெற வில்லையாம் . இதைப்பற்றி ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கவின் இடம் கேட்டபோது எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது . ஆகையால் தான் நான் இப்படி நடந்து கொள்கிறேன் என்று கவின் அதற்கு பதில் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருவதால் நெட்டிசன்கள் பலரும் இணைந்து கவிலியா ஆர்மி என்று அமைத்துள்ளனர் . இதன்மூலம் அவர்கள் இருவரது காதலும் நிறைவேற வேண்டும் எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தற்போது நடைபெற்ற சம்பவமானது இவர்களது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .