உலக கோப்பை முதல் ஆட்டம்! கோலிக்கு காயம்! பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பயிற்சியில் ஈடுபதும் போது அவரது கட்டை விரலில் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி வருகிற 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இங்கிலாந்தின்  சவுத்தாம்ப்டனில் நகரில் இந்திய அணி   பியிற்சியில் ஈடுபட்டு வருகிறது .பயிற்சியில் ஈடுபடும் போது கோலியின் வலதுக்கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது .

கோலியின் காயம் வலைப்பயிற்சியின் போதா  அல்ல ஃபீல்டிங் போதா  என்ற விவரம் தெரியவில்லை .இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி வலைப்பயிற்சி  பயிற்சி முடித்துவிட்டு  வரும் பொழுது  தனது கட்டை விரலை குளிர்ந்த நீரில் வைதித்துஇருப்பது போல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

இதற்கு முன்னதக  இந்திய கேப்டன் கோலியை அணியின் உடற்பயிற்சி நிபுணர்  வெகு நேரம் சோதனை செய்தார் .இந்த தகவலை பற்றி இந்திய அணியின் நிர்வாகம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தியையும் வெளியிடவில்லை .தென்னாப்பிரிக்கா அணியுடனான  முதல் போட்டி வரும் ஜூன் 5ஆம் தேதி விளையாட உள்ள நிலையில்  கோலியின் இந்த   காயம் ரசிகர்களிடம் மிகவும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஆனால் போட்டிக்கு இன்னும் இரண்டு  நாட்கள் உள்ள நிலையில் இந்த காயத்தில் இருந்து விரைவில் குணமடைவார் என நம்பலாம் . அதே போல் கோலிக்கு பெரிய காயம் இல்லை என்றும் அவர் முதல் போட்டியில் விளையாடுவார் என்று கூறி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது பிசிசிஐ.

இருந்தாலும் ஏற்கெனவே இந்திய அணியில் கேதார் ஜாதவ் மற்றும் விஜய்  சங்கர் இருவரும் காயங்களில் இருந்து குணமடைந்து வரும் நிலையில் கேப்டன்  கோலியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.