தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபல நடிகரும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை மிகப்பெரியதாக விசுவரூபம் எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படியே காட்டிகிட்டே இருந்தா விவாகரத்து தான்! மனைவி நடிகையை விரட்டும் கணவன் நடிகர்! கோடம்பாக்கம் கிசுகிசு!
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வந்தவர் அந்த ஹீரோ ஆவார். அறிமுகமான சில காலத்திலேயே பல ஹிட்டான திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார். அதன்பின்னர் துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த பல படங்கள் அவருக்கு தோல்வியை பெற்றுத்தந்தது .
இதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அவர் விட்ட இடத்தை பிடிப்பதற்கு ஊன்றுகோலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரமாக அந்த சீனியர் நடிகர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இந்த சீனியர் நடிகர் தன்னுடன் நடித்த இளம் நடிகை ஒருவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதிக வயது வித்தியாசம் இருப்பினும் இருவரும் காதல்வசப்பட்ட தால் வயது ஒரு என் மட்டும்தான் என்று கருதி திருமணம் செய்து கொண்டனர். அந்த கதாநாயகி திருமணத்திற்கு முன்பாக தன் காதலனிடம் பல கண்டிஷன்களை போட்டுள்ளார். அவை அனைத்திற்கும் அந்த ஹீரோ சம்மதித்த பின்புதான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதில் மிக முக்கியமான கண்டிஷன் திருமணத்திற்கு பின்பும் அந்த ஹீரோயின் நிறைய படங்களில் நடிப்பேன் என்பதாகும். ஆனால் அந்த ஹீரோ, தற்போது தன் மனைவியை எந்த திரைப்படத்திலும் நடிக்க கூடாது என்று கட்டளை போடுகிறாராம். அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட கூடாது என்றும் மற்ற நடிகர்களுடன் சாட் செய்வதோ போன் செய்வதோ கூடாது எனவும் அவர் கட்டளையிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான அந்த ஹீரோவின் மனைவி மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம். இந்த பிரச்சனை பெரிதாகி இவர்களது விவாகரத்து வரை செல்ல கூட வாய்ப்பிருக்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகிறது . இவர்கள் இடையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பிரபல இயக்குனர் ஒருவர் முன்வந்து இருக்கிறாராம் அவர்களுடைய பிரச்சனையை கேட்டு இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.