ஏழைகளுக்கு 850 வீடுக்ள கட்டிக் கொடுத்தவர்! ஆனா்ல தேர்தலில் ஓடந்துரை சண்முகத்தை தோற்கடித்த மக்கள்! அதிர்ச்சி காரணம்!

கோவை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவர் பதவியில் வெற்றி பெற்று வந்த தம்பதி முதல்முறையாக தோல்வி அடைந்துள்ளனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது ஓடந்துறை ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக சண்மும் மற்றும் அவரது மனைவிதான் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சித் தலைவர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருக்கும்போதுதான், காற்றாலை அமைத்து, ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

கிராம மக்கள் தேவைக்குப் போக மீதம் உள்ள மின்சாரத்தை, தமிழக அரசின் மின் வாரியத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 850 பசுமை வீடுகளைக் கட்டித்தந்து, ஓடந்துறையை குடிசைகள் இல்லாத கிராமமாக மாற்றினார், சண்முகம். ராஜீவ் தேசிய குடிநீர் திட்டம் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த ஊராட்சியில்தான்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஓடந்துறை ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் சண்முகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த உறவினர் தங்கவேல் போட்டியிட்டார். ஏற்கனவே சண்முகம் பல நல்ல விஷயங்கள் செய்திருப்பதால் அவர்தான் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 57 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேலிடம் சண்முகம் தோல்வியடைந்தார். இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த, சண்முகம். என் தந்தை காலம் முதல் ஊராட்சித் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்கிறோம். அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை 100 சதவிகிதம் பயன்படுத்தியிருக்கோம்.

தேர்தலின் தனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் நேருக்கு நேராக ஜெயிக்க முடியாது என்று நினைத்தவர்கள், மக்களுக்கு காசு கொடுத்து திசை திருப்பிவிட்டார்கள். மக்களும் கடந்த காலத்த நினைக்காமல் பணம்தான் பெரிது என அவர்களுக்கு வாக்களித்து விட்டார்கள் என குற்றம் சாட்டினார்.