தாம்பத்ய உறவில் ஸ்டார்ட்டிங் டிரபுளா? முழுமையாக செயல்பட முடியவில்லையா? நீங்கள் சாப்பிட வேண்டியது இது தான்!

தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஏற்படுத்த எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுப் பொருட்கள் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?


வெங்காயம் இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, இரத்த அளவு அதிகமாகி, ஓட்டத்தை பெருக வைக்கிறது. அதனால் நீண்ட நேர ஆணுறுப்பின் எழுச்சிக்கு காரணமாக அமையும். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நலம். அதேபோல் கிராம்பு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். உடல் உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பெற உதவுகிறது.

கொண்டை கடலை விந்து ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாலை நேரங்களில் சுண்டல் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் தயிர்சாதம் எடுத்துக்கொள்ளுங்கள். தயிரில் ஜிங்க் என்கிற துத்தநாக சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்காய் ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபடும் சக்தியையும், வலிமையையும் கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முந்திரிபருப்பிலும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது. ஜிங்க் சத்தின் அளவிற்கும், தாம்பத்தியத்தில் ஆண்களின் ஆணுறுப்பு விறைப்புத்தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே உடலுறவின்போது சீக்கிரத்திலேயே சோர்ந்து போகும் ஆண்கள் மேற்கண்ட உணவு முறைகளை பின்பற்றி வந்தால் நிச்சயம் தாம்பத்ய நேரத்தில் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கும் என்பதில் மாற்றமில்லை.