காரின் டிக்கியை திறந்த தந்தை..! உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்..! அதிர்ச்சியில் உறை வைக்கும் சம்பவம்! நீடிக்கும் மர்மம்!

அமெரிக்காவில் 2 வாரங்களுக்கு முன்னர் மாயமான இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பிஏ மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


குஜராத் மாநிலத்தை சேந்த மருத்துவர் ஆஷரப் மகள் பெயர் சுரேல். இவர் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். அதே சமயம் அவரது தந்தை நடத்தி வரும் மெடிக்கல் சென்டரில் பகுதிநேரமாக பணிபுரிந்தும் வந்தார்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியில் சென்ற சுரேல் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து பெற்றோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேலை தேடிவந்த நிலையில், அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் எனவும் அவரது பெற்றோர் பிரகடனம் செய்தனர்.

ஆனால் பெற்றோருக்கு இறுதியில் சோகமான தகவலே வந்து சேர்ந்தது. சுரேல் பயன்படுத்திய கார் வெஸ்ட் கார்பீல்ட் பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் பெற்றோர் உதவியுடன் காரின் டிக்கியை திறந்து பார்த்தபோது சுரேல் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சுரேலை கொன்றவர்கள் யார், எதற்காக என்கிற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.