மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்! ரகசியமாக சென்று திரும்பிய மு.க.ஸ்டாலின்! வைரல் புகைப்படம்!
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனின் மகள் டாக்டர் அ.மதுமலர் - டாக்டர் க.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மேல்மருவத்தூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் யாரும் எதிர்பாரத வகையில் திடீரென கலந்து கொண்டார். மண்டபத்திற்கு வந்த ஸ்டாலினை பங்காரு அடிகளானி மகன் அன்பழகன் கட்டி அணைத்து வரவேற்றார். பிறகு நேராக மேடைக்கு சென்ற ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, த மோ அன்பரசன், மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு, எழிலரசன், நெல்லிக்குப்பம் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர். இதனிடையே ஸ்டாலின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வருவது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
ஸ்டாலின் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு சென்ற பிறகும் கூட திமுகவின் ஐடி பிரிவு அது தொடர்பான தகவல்களை வெளியே கசியவிடவில்லை. ஆனால் பங்காரு அடிகளார் தரப்பில் இருந்து அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.