முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்!

அரசியல்வாதிகள் என்றாலே ஒருவருக்கொருவர் எப்போதும் முறைத்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை, அரசியல் நாகரிகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை தமிழகத்திற்கு கற்றுக்கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.


கருணாநிதி மறைவுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் மரியாதை செய்யப்பட்டதை யாரும் மறந்திருக்கவே முடியாது. அப்படிப்பட்ட பண்பாளராகத் திகழ்ந்துவருபவர் எடப்பாடி பழனிசாமி.

அதனால்தான், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். 

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடியும் ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்களது மறைவையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.