நான் அணிந்திருக்கும் உடையை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஜோதிமணி.
என் உடல்..! என் உடை..! என் விருப்பம்..! செந்தில் பாலாஜியுடன் சர்ச்சை புகைப்படத்திற்கு கரூர் ஜோதிமணி கொடுத்த பதில்!
அமெரிக்காவை சேர்ந்த விட்டல் வாய்ஸ் என்ற அமைப்பு 25 நாடுகளில் உள்ள பெண் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில் நம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்த எம்பி ஜோதிமணி அவர்கள் இந்த விருதை பெற்றுக் கொள்ள ஐநா விட்டல் வாய்ஸ் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று இருந்த எம்பி ஜோதிமணிக்கு அரசியல் கட்சியையும் தாண்டி திமுக கட்சியின் எம்எல்ஏ செந்தில் பாலாஜி தன்னுடைய தங்கையான ஜோதிமணிக்கு பூங்கொத்து அளித்து வழியனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல் செந்தில் பாலாஜி எம்பி ஜோதிமணியின் உடன் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன் தங்கை வெற்றிகரமாக அமெரிக்காவில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி அடையும் மாறு வாழ்த்தி சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
இதனால் மனம் நிறைந்த ஜோதிமணி தாய் தந்தையாக முன்நின்று வழியனுப்பி வைத்த தன் அண்ணனுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதில் பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் எம்பி ஜோதிமணி ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்திருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஜோதி மணியை கண்டபடி கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். ஒருவருடைய வைத்து அவரை கிண்டல் அடிக்கும் பழக்கத்தையும் ஆரம்பித்துவிட்டனர். இதனால் கடுப்பான ஜோதிமணி தன்னுடைய பதிவில் தன் அண்ணனான செந்தில் பாலாஜிக்கு நன்றி கூறிய பின்னர் தன்னை கலாய்த்த நெட்டிசன்களுக்கு சரியான நெற்றியடி அளித்துள்ளார்.
அதாவது அந்த பதிவில் என்னுடைய உடை குறித்து பேசும் காவிவாதிகளின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த நிகழ்ச்சிக்கு எம்மாதிரியான உடை அணிய வேண்டும் என்பது நன்றாக தெரியும். இது முழுவதும் என்னுடைய தனிப்பட்ட உரிமை ஆகையால் நீங்கள் சற்று அமைதியாக இருங்கள் என்று அந்த பதிவில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் நான் வெற்றிகரமாக அமெரிக்காவிற்கு சென்று வந்த பிறகு இன்னும் நீங்கள் எரிச்சல் அடையும் விதமாக மேலும் சில பதிவுகளை பதிவு செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தன்னை கலாய்த்த சமூகவலைதள வாசிகளின் முகத்தை கிழித்து எறிந்து இருக்கிறார்.