கணவனை இழந்து தனிமையில் தவித்த 9 பெண்கள்! ஆசையை தூண்டி இளைஞன் செய்த விபரீதம்!

கல்யாணம் செய்வதாக ஆசை காட்டி 9 பெண்களை ஏமாற்றி வந்த காதல் மன்னனை காவல்துறையினர் கைது செய்த சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலையில் உள்ள செல்வ விநாயகர் நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு முதல் இவர் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றி வரும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சிறுவயதிலேயே கணவனை இழந்து வாழும் கைம்பெண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள், 35 வயதுக்கு மேல் கல்யாணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் ஆகியோரை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விடுவார். சென்னை,மதுரை,திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள பெண்களை குறிவைத்து ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதுவரை இவர் 9 விதவை பெண்களை ஏமாற்றியுள்ளார். அதில் 2 டாக்டர்கள், 4 என்ஜினியர்கள்,3 பட்டதாரிகள் அடங்குவர். இவர்கள் அனைவரும் சமுதாயத்தில் நல்ல வசதி படைத்தவர்களாவர்.  இந்த 9 பெண்களில் ஒருவரை கடந்த 2017-ஆம் ஆண்டில்  திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இவரின் உண்மையான சுயரூபத்தை பின்னர் உணர்ந்த மனைவி இவரை ஒதுக்கிவிட்டு குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார். திருச்சியை சேர்ந்த டாக்டர் ஒருவரை இவர் ஏமாற்றினார். பின்னர் அந்த டாக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி காவல்துறையினர் இவரை கைது செய்து சில காலம் சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைப்பட்ட சில மாதங்களுக்கு முன்பு 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை இணையதளம் மூலம் சந்தித்துள்ளார். அவர் ஒரு டாக்டர். அவர் குண்டாக இருப்பதால் இதுவரை அவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனை அறிந்து கொண்ட சக்கரவர்த்தியை அவரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைத்துள்ளார். கல்யாணம் ஆகாத விரக்தியில் இருந்த டாக்டர் இவருடைய வார்த்தைகளில் மயங்கி ஒப்பு கொண்டுள்ளார்.

சுமார் 7 கோடி ரூபாயை சக்கரவர்த்தியிடம் அளித்துள்ளார். அதனை வைத்து சக்கரவர்த்தி திருவண்ணாமலை சென்னை ஆகிய பகுதிகளில் பல்வேறு சொத்துக்களை சேர்த்தார். கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இருவரும் உல்லாசமாக இருந்தனர். சொத்துக்களையும் பெற்று சுகத்தையும் பெற்ற பின்னர் சக்கரவர்த்தி டாக்டரை ஏமாற்றிவிட்டு சென்றுள்ளார்.

இவரின் சுயரூபத்தை புரிந்து கொண்ட பெண் டாக்டர் சென்னை காவல் துறை ஆணையரான விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். திருச்சி சிறையில் இருந்த சக்கரவர்த்தியை நீதிமன்றத்தின் அனுமதியோடு மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.

9 பெண்களிடம் 10 கோடிக்கு மேல் மோசடி செய்து இருக்கும் சம்பவமானது பல நகரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.