சுடுகாட்டில் எரிக்கத் தயாரான போது அசைந்த சடலம்..! வாயில் இருந்து வெளியே வந்த நுரை..! இறந்த நபரின் திக் திக் செயல்!

இறுதி சடங்கின் போது இறந்தவர் அசைந்த சம்பவமானது ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர். இங்கு பப்பு ரெய்க்கர் என்ற 30 வயது நபர் வசித்து வந்தார். எதிர்பாராத வகையில் அவர் நேற்று இயற்கையான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவருடைய உறவினர்கள் இறுதி சடங்கிற்காக உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றனர். அங்கு இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன. அனைவரும் மும்மரமாக செயல்பட்டு கொண்டிருந்தபோது பப்புவின் உடல் லேசாக அசைந்துள்ளது. மேலும் அவருடைய வாயில் நுறை தள்ளியது. இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் இதனை உறவினர்கள் நம்பத் தயாராக இல்லாததால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். மேலும் அதற்கான சான்றுகளையும் காவல்துறையினரிடம் கொடுக்க மறுத்துவிட்டனர்.

பின்னர் காவல்துறையினர் கண்டிக்கும் முறையில் விசாரணை நடத்த, பப்பு ரெய்க்கர் அதிக அளவில் மது அருந்திவிட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது ஜெய்ப்பூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.