ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் போல ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறார்கள். எந்த அரசியல் சார்பும் இன்றி இந்த விவாதம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து ஸ்ரீதர் சுப்பிரமணியம் எழுதியிருக்கும் பதிவு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
ராகுல் காந்தியின் சவால் ஏற்பதற்கு மோடி ரெடியா?
ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் போல ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறார்கள். எந்த அரசியல் சார்பும் இன்றி இந்த விவாதம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து ஸ்ரீதர் சுப்பிரமணியம் எழுதியிருக்கும் பதிவு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு நேற்று காங்கிரஸ் கடிதம் அனுப்பி இருக்கிறது. ராகுல் அல்லது மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்வார் என்று கட்சி தெரிவித்திருக்கிறது. நேற்று லக்னோவில் பேசும் போது ராகுலும் 'விவாதத்துக்கு 100% தயார்,' என்று அறிவித்திருக்கிறார். பாஜக தரப்பில் இருந்து எந்த பதிவிலும் இன்னமும் வரவில்லை.
2014 தேர்தலுக்கு முன்பு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கை 'விவாதத்துக்கு வருகிறாயா?' என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார். இதே போல 2019ல் ராகுலை பாஜகவினர் அழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது 'நான் தயார்' என்று ராகுல் அறிவித்திருக்கிறார்.
மோடி நேரடியாக எதுவும் சொல்லவில்லை எனினும் பாஜகவின் சுதான்சு திரிவேதி நேற்று பேசுகையில் 'பிரதமருடன் பேச ராகுலுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் வெறும் எம்பி மட்டும்தானே? அவர் ஒரு கட்சியின் தலைவர் கூட இல்லையே,' என்று நக்கல் அடித்திருக்கிறார்.
அவர் ஒரு கட்சியின் தலைவர் இல்லை ன்பதினால்தான் காங்கிரஸ் தங்கள் கடிதத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பெயரையும் சேர்த்து குறிப்பிட்டிருந்தார்கள். எனவே வெறும் ஒரு 'சாதா எம்பி' யுடன் வேண்டாம் எனில் இரண்டாவது பெரிய தேசியக் கட்சித் தலைவருடன் விவாதிக்கலாம். பிரச்சினை இல்லை. அவர்கள் ரெடியாகவே உள்ளார்கள்.
இது ஒரு புறம் இருக்க, ராகுலை 'சாதா எம்பி' என்று சொல்லுவதில் ஒரு கேள்வி வருகிறது. மேடைக்கு மேடை பேசும் போதெல்லாம் பிரதமர் 'ஷெஹசாதா' என்ற பதத்தை வரிக்கு வரி குறிப்பிடுகிறார். இதற்கு 'இளவரசர்' என்று அர்த்தம். அது ராகுலைத்தான் குறிக்கிறது. அது என்ன ராகுலையே தொடர்ந்து வம்புக்கு இழுக்கிறார்? எதிர்க் கட்சித் தலைவர்கள் நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டு விட்டு சாதாரண எம்பி ஒருவர் பற்றி பிரதமர் எதற்கு பிரச்சார மேடைகள் எங்கும் பேச வேண்டும் என்று திரிவேதி அவர்கள் விளக்குவாரா?
என்னைக் கேட்டால் மன்மோகன் சிங், நரேந்திர மோடி இருவரையும் விவாதத்துக்கு அனுப்பலாம். இருவருமே 10 ஆண்டுகள் பிரதமர்களாக இயங்கி முடித்தவர்கள். இரண்டு ஆட்சியின் சாதக பாதகங்கள் குறித்து இருவரும் பேசலாம். அதற்கு டாக்டர் சிங் இப்போது தயாராகவே இருப்பார் என்று நம்புகிறேன்.
ஆனால் மோடி எந்த விவாதத்துக்கும் தயாராக இருக்க மாட்டார் என்று உறுதியாக நம்பலாம். காரணம் அவருக்கு எதிரில் காதுகள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எதிரபார்க்கிறார். வாய்கள் அல்ல. பேசத் தெரிந்த வாயும், சிந்திக்கத் தெரிந்த மூளையும் மோடிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே அலர்ஜியான விஷயம் என்று கூறியிருக்கிறார்.