பால் டேம்பரிங்! ஒப்புக் கொண்ட பந்து வீச்சாளர்! கூண்டோடு சிக்கப்போகும் இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் ரிவெர்ஸ் ஸ்விங் செய்வதற்காக பந்தை சேதப்படுத்தியதாக பல வருடங்களுக்கு பிறகு தானே ஓப்புக்கொண்டுள்ளார்.


கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி சர்வதேச போட்டிகளில் விளையாட அவர்களுக்கு ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், பந்தை ஈரமாக வைத்தால் தான் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.

மேலும் பந்து ஈரமாக இருந்தால் ரிவெர்ஸ் ஸ்விங் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதாலும் பந்தில் சன்ஸ் ஸ்க்ரீன் மற்றும் மிண்ட்ஸ் ஆகியவற்றை தேய்த்து பந்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல மாற்றி இருக்கிறேன் எனவும் கூறியிருந்தார். மேலும் நான் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் போது என்னுடைய வேலையே பந்தை வேக பந்து வீச்சாளர்களான ஆண்டர்சன் போன்றோர்களுக்கு ஏற்றாற்போல தயார் செய்வதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சமயம் பந்தை பேண்ட் பாக்கெட்டில் உள்ள ஜிப்பில் போட்டு தேய்த்து பந்தை ஸ்விங் செய்வதற்காக சேதப்படுத்தியதாகவும் அவரே கூறியிருக்கிறார்.  அனால் ஐசிசி விதிப்படி வீரர்கள் பந்தை சைன் செய்யலாம். அனால் அதற்காக செயற்கையாக எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது என ஒரு விதியே உள்ளது. இந்த விதியை வைத்து பார்க்கும் போது மான்டி பனேசர் பந்தை சேதப்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.