ஒல்லி நடிகருடன் பிரபல நம்பர் நடிகை மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்தரங்கம் இது அந்தரங்கம்..! ஒல்லிபிச்சான் நடிகர் - நம்பர் நடிகை..! கசியும் ரகசியம்..! கோடம்பாக்கம் கிசுகிசு!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்பொழுதும் சீரியல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொலைக்காட்சிகளிலும் தற்போது பழைய திரைப்படங்களை தூசி தட்டி அதனை ஒளிபரப்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒல்லி நடிகரும் நம்பர் நடிகையும் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்த திரைப்படம் இருவருக்கும் மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்தது. காமெடி கலந்த குடும்ப பாங்கான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்தத் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்த பலரும் ஏன் இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி, அதற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்த விஷயம் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.
அதாவது இந்த ஒல்லி நடிகரும் நம்பர் நடிகையும் நடித்த திரைப்படம் வெற்றி பெற்றதற்கு பின்பு அடுத்த வருடமே இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். அந்த நேரத்தில் இந்த நம்பர் நடிகை, தான் நடித்த திரைப்படத்தின் இயக்குனர் மீது காதலில் விழ ஆரம்பித்தார்.
இதனைப் பார்த்து வெறுப்பான அந்த ஒல்லி நடிகர் மீண்டும் அந்த நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்த கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் தான் மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுத்த இந்த ஜோடி மீண்டும் திரைப்படத்தில் சேரவே இல்லை என்று கூறப்படுகிறது. என்னதான் இருந்தாலும் ஏன் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என்பதற்கு இதுவரை சரியான காரணம் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும்.