முன்னாள் கூட்டாளி நவீன் பட்நாயக் மோடிக்கு சாட்டையடி சவால்

ஒரிசாவில் முன்பு மோடியி கூட்டாளியாக இருந்த நவீன் பட்நாயக் இப்போது தனித்து களம் காண்கிறார். இவரைத் தான், ‘எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, அந்த மாவட்டங்களின் தலைநகரத்தின் பெயர் தெரியுமா?’ என்று கேட்டிருந்தார். இந்த நிலையில் நவீன் பட்நாயக் மோடிக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.


ஒரிசாவில் முன்பு மோடியி கூட்டாளியாக இருந்த நவீன் பட்நாயக் இப்போது தனித்து களம் காண்கிறார். இவரைத் தான், ‘எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, அந்த மாவட்டங்களின் தலைநகரத்தின் பெயர் தெரியுமா?’ என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில் நவீன் பட்நாயக் மோடிக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார். ’மோடி அவர்களே ஒரிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எங்களது ஒடியா மொழி மிக நீண்ட வரலாறு கொண்ட ஓர் உயர்தனிச் செம்மொழி. ஆனால் சமஸ்கிருத வளர்ச்சிக்குக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நீங்கள் ஒடியா மொழி வளர்ச்சிக்குக்கு ஒதுக்கிய தொகை வெறும் பூஜ்ஜியம்.

பாரம்பரியம் மிக்க ஒரிசா இசையை செம்மாந்த இசையாக அறிவியுங்கள் என்று 2 முறை கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை 2 முறையும் நிராகரித்து விட்டீர்கள். ஒரிசா மாநிலத்தின் சாதனை நாயகர்களை நீங்கள் அங்கீகரித்ததே இல்லை. எங்கள் மகத்தான தலைவர் பிஜு பட்நாயக் அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதை திட்டமிட்டே புறக்கணித்தீர்கள்.

ஒரிசா விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு 2 மடங்கு ஆதார விலை கிடைக்கும் என்றீர்கள். விவசாயிகளை ஏமாற்றி விடீர்கள். கடற்கரை சாலை அமைத்துத்தந்து ஒரிசா வளர்ச்சியை உறுதி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அதையும் மறந்து விட்டீர்கள். நிலக்கரிதான் ஒரிசாவின் இயற்கை வளம். எங்கள் செல்வத்தை அடிமாட்டு விலைக்கு அள்ளிச் செல்கிறீர்கள். அதற்கான விலையை கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தவே இல்லை.

2014 தேர்தலிலும் 2019 தேர்தலிலும் விலைவாசியைக் குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். கேஸ் சிலிண்டர் விலை குறைப்பேன், பெட்ரோல் விலை குறைப்பேன், டீசல் விலை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஜி.எஸ்.டி குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மறந்து விட்டீர்கள்.

தேர்தல் வந்ததும் ஓட்டுக் கேட்டு மீண்டும் ஒரிசாவுக்கு வருகிறீர்கள். ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்து நீங்கள் ஏமாற்றியதை ஒரிசா மக்கள் மறக்கவில்லை. பூரி ஜெகன்னாதர் சாட்சியாக சொல்கிறேன். ஒன்றியத்தில் இந்த முறை நீங்கள் ஆட்சி அமைக்கப்போவதில்லை. ஒரிசாவில் 6 ஆவது முறையாக பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் என்று சவால் விட்டிருக்கிறார்.