அவிநாசியில் நடந்த பேருந்து விபத்தில் திருமணமாகி சில நாட்களே ஆன புது மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்போ தான் ஹனிமூன் முடிஞ்சது..! பேருந்தில் வந்த புது மனைவிக்காக காந்திருந்த இளம் கணவனுக்கு கிடைத்த அதிர வைக்கும் தகவல்!
கேரள அரசு சொகுசு பேருந்து ஒன்று 48 பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் அண்ணா சிலை அருகே சென்றுகொண்டிருந்தது. அந்நேரத்தில் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொச்சியிலிருந்து டைல்ஸ்களை உள்ளடக்கிய கண்டெய்னர் லாரி அவிநாசி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்படியாக வரும்பொழுது கண்டைனர் லாரி பயணிகள் பயணித்த சொகுசு பேருந்தின் மீது மோதியது. இதனால் பேருந்தின் ஒரு பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுமார் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த பேருந்தில் பயணித்த 48 பயணிகளில் ஒருவர் அனு என்ற பெண். இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தான் திருமணம் முடிந்தது. அனு கேரளாவை சேர்ந்த ஸ்னிஜோ ஜோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களுக்கு இத்தம்பதியினர் ஹனிமூன் சென்று வந்துள்ளனர். இதனையடுத்து அனு பெங்களூருவில் பணியாற்றி வருவதால் அங்கு பணி நிமித்தமாக சென்றிருக்கிறார்.
தன் கணவர் கத்தாரில் பணியாற்றி வருவதாகவும் அவரை மீண்டும் கத்தாருக்கு வழி அனுப்பி வைப்பதற்காகவும் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு பயணித்திருக்கிறார். அப்போதுதான் இந்த லாரியுடன் கேரள அரசு பேருந்து மோதி உள்ளது. இந்த விபத்தில் அனு உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தன்னுடைய புது மனைவி தன்னை பார்ப்பதற்காக வருகிறார் என்பதற்காக அனுவின் கணவர் ஸ்னிஜோ ஜோஸ் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் வராததால் அனுவின் செல்போனுக்கு போன் செய்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அனு பயணித்து வந்த பேருந்து அவிநாசி அருகே விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஸ்னிஜோ ஜோஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருக்கிறார். பின்னர் பல இடங்களில் தேடி கடைசியில் மருத்துவமனை ஒன்றில் அனு சடலமாக மீட்க பட்டிருக்கிறார்.
அனுவின் சடலத்தை பார்த்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கணவரை பார்த்து ஊருக்கு அனுப்பி வைக்க வந்த அனு கடைசி வரை தன்னுடைய கணவரை பார்க்காமலேயே உயிரிழந்து விட்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.