அரிசி ஆலையில் வெட்டி கூறு போடப்பட்ட புதுமாப்பிள்ளை..! 20 வயதே ஆன இளம் மனைவிக்கு அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி!

திருமணமான 4 மாதங்களில் புதுமாப்பிள்ளை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் என்ற இடம் அமைந்துள்ளது. அரக்கோணத்திற்கு அருகேயுள்ள நிமிலி என்ற இடத்திற்கு உட்பட்ட கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெயன். இவர்களுடைய மகனின் பெயர் பாரதிதாசன். பாரதிதாசனின் வயது 23.

இவர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வாலாஜாபாத்துக்கு அருகே அமைந்துள்ள படாளம் என்ற கிராமத்தில் கோழிப்பண்ணை இயக்கி வந்தார். அங்கம்பாக்கம் என்ற கிராமத்தில் வசித்து வந்த சங்கீதா என்ற 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இருவரும் படாளம் கிராமத்திலேயே வசித்து வந்தனர். நேற்று பாரதிதாசன் தன்னுடைய மனைவி சங்கீதாவை இருசக்கர வாகனத்தில் சங்கீதாவின் சொந்த ஊரான கீழவெங்கடபுராத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையில் இரவு 10 மணிக்கு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு பாரதிதாசன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அதே பகுதியில் வசித்துவந்த தனசேகர் என்பவரது ரைஸ்மில்லில் பாரதிதாசன் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. உடனடியாக சங்கீதா மற்றும் உறவினர்கள் பாரதிதாசனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். 

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாரதிதாசனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பாரதிதாசன் தன்னுடைய நண்பர்களுடன் நேற்று இரவு மது அருந்த சென்றதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் பாரதிதாசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.

பாரதிதாசனின் நண்பர்கள் அனைவரும் மது போதை தெரியாததால் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.