மகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படுவதாக வெளியான தகவலை மறுத்துள்ள கோவில் நிர்வாகம் நாளை முதல் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறதா சீரடி சாய்பாபா கோவில்..? பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சற்று முன் வெளியிட்ட தகவல்!
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்திருந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தரிசனம் செய்துவிட்டு அளித்த பேட்டியில், சாய்பாப பிறந்தது ஷீரடி அல்ல எனக் கூறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சாய்பாப பிறந்தது, பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடம்தான் என்று கூறினார்.
மேலும் பத்ரி நகர வளர்ச்சிக்கென 100 கோடி ருபாய் வழங்கப்படும் என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஷீரடி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்த அறிவிப்பை முதலமைச்சர் திரும் பெற வேண்டும் என வலியுறுத்தி நாளை ஒருநாள் ஸ்ரீரடியில் முழு அடைப்பு நடைபெறும் என அறிவித்தனர்.
இதையடுத்து ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்ததாக விஷமிகள் சிலர் புரளி பரப்பினர். இதையடுத்து இந்த போலியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த சாய்பாபா கோயில் நிர்வாகம் நாளை வழக்கம்போல் கோயில் திறந்திருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது.
கோவிலில் வழிபாடு உள்ளிட்ட அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும், மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் எனவே பக்தர்கள் அனைவரும் தயக்கம் இன்றி வரலாம் என தெரிவித்துள்ளது. எனினும் பொதுமக்கள் அறிவித்த பந்த்தால் ஷீரடியில் நாளை ஓட்டல்கள், தர்மசாலைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.