கொரோனா காலத்துக்குப் பிறகு, இந்திய அளவில் தமிழகத்தில்தான் தொழில் புரட்சி நடக்கும் அளவுக்கு எக்கச்சக்க முதலீடுகள் வந்துசேர்ந்துள்ளன. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத தொடர் முயற்சிதான்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சிக்கு வெற்றி… 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் ஓலா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம்.
அந்த வகையில் புதிய முதலீடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கும் ட்வீட்டில், ’மின்சார வாகனத்துறையில் பெருமளவில் காலடித்தடம் பதித்திருக்கும் ஓலா கேப்ஸ் நிறுவனத்துடன் கிருஷ்ணகிரி - ஓசூரில், ரூ.2,354 கோடியில் 2,182 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கக் கூடிய மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்ஸி போக்குவரத்து சேவைகளை வழங்கிவரும் ஓலா நிறுவனம் புதிய துறையில் தடம் பதிக்க ஆயத்தமாகியுள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழையும் ஓலா, வருகிற 2021 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் களமிறக்குகிறது.
நெதர்லாந்தில் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்துவந்த ஓலா நிறுவனம் இப்போது சென்னையில் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இயங்கும் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஓலா கடுமையான போட்டியை வழங்கும் எனவும், ஓலா ஸ்கூட்டர்களின் விலை மற்ற நிறுவனங்களுக்கு ஈடாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தமிழக அரசுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஓலா நிறுவனம் இதற்காக ரூ.2,400 கோடியை முதலீடு செய்கிறது. இதன் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான பவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.