முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகித்த பொதுமக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா? முஸ்லீம் நபரை முஸ்லீம் சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு..! இந்துக்கள் மயானத்தில் இடம் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்! எங்கு தெரியுமா?
ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் காஜா மியா. இவருடைய வயது 55. இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்,சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவருடைய சொந்த ஊரானது கர்னூல் மாவட்டம் ஆகும். 200-கீ.மீ தூரத்திற்கு சடலத்தை எடுத்து செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்த உறவினர்கள் ஐதராபாத்தில் இறுதி சடங்கு செய்ய திட்டமிட்டனர்.
அப்பகுதியிலுள்ள மயானத்திற்கு இறுதி சடங்கு செய்வதற்காக சென்றபோது, அங்கு வசித்து வந்த பொதுமக்கள் அனுமதி தரவில்லை. அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனாவால் அவர் உயிரிழக்கவில்லை என்பதை நிரூபித்தும் மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இறுதி சடங்கு செய்ய இயலாமல் தவித்த உறவினர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த சந்தீப் மற்றும் சேகர் ஆகிய இளைஞர்கள் உதவி செய்தனர். இந்து மயான பூமியில் அவரை புதைப்பதற்கு உதவி செய்தனர். இந்த நிகழ்வானது இன்னமும் நம் நாட்டில் மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உடலை புதைக்க விடாமல் தடுத்த மக்கள் மீது வக்ஃபு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என்பதை நிரூபித்த பிறகும், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இனியாவது மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு அறிவியலை உணர்ந்தால் நன்றாக இருக்கும்.
இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.