சிறுநீரகங்கள் செயல் இழந்தன! பேச்சு நின்றது! உயிருக்கு போராடும் பரவை முனியம்மா! கடைசி ஆசை இது தானாம்! நெஞ்சை உலுக்கும் கோரிக்கை!

குணசித்திர நடிகராக புகழ்பெற்ற பரவை முனியம்மா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அவருடைய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே பரவை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பிறந்தவர் முனியம்மா. 2003-ஆம் ஆண்டு சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த தூள் எனும் திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு பாட்டியாக நடித்தார். அந்த படத்தில் அவர் பாடிய "சிங்கம் போல" என்னும் பாட்டு தமிழ்நாடு முழுவதும் பரவியது.

பின்னர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் பரவை முனியம்மா நடித்து வந்தார். 2014-ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த "மான்கராத்தே" என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டு வந்தன. இவருடைய உடல் நிலை மோசமானதை அறிந்த முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதா அவர்கள் வங்கியில் பரவை முனியம்மாவின் பெயரில் 6 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக அளித்தார். அதன் மூலம் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் கிடைத்துவந்தது.

அவருக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமாரை தவிர மற்றவர்களுக்கு திருமணம் செய்துவிட்டார். இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 சிறுநீரகங்களும், நுரையீரல்களும் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் பணமில்லாத காரணத்தினால் அவருடைய மகள்கள் அவரை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்துவிட்டனர். பரவை முனியம்மாவுக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு திரைத்துறையினரும் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டுமென்று அவருடைய மகள்கள் கேட்டுள்ளனர்.

இந்த செய்தியானது பரவை முனியம்மாவின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.