பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் 7 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைய ஆயுர்வேதிக் மருந்து கிட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கொரோனில் ஸ்வசரி! 7 நாட்களில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து! விலை ரூ.545! பதஞ்சலி கண்டுபிடித்தது!
உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதன் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டு பிடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேதிக் கிட் ஒன்றை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஏழு நாட்களில் கொரோனா நோயை குணப்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய பாபா ராம்தேவ் அவர்கள், இந்த மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி. நாடு முழுவதும் உள்ள சுமார் 280 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த மருந்தானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி ஆராய்ச்சி மற்றும் NIMSம் இணைந்து ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள மருந்தை குறித்து அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம். டெல்லி மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை நாடு முழுவதும் 280 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்தோம். அவர்கள் அனைவரும் 100% பூரண குணம் அடைந்துள்ளனர்.
NIMS பல்கலைக் கழகத்தின் உதவியுடன் 95 நோயாளிகள் மீது மருத்துவ கட்டுப்பாட்டு ஆய்வையும் நாங்கள் மேற்கொண்டோம். நாங்கள் ஆய்வு நடத்திய மூன்று நாட்களில் 69% பேர் குணமடைந்தனர். 7 நாட்களில் 100 சதவீதம் பேர் குணம் குணம் அடைந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.