படுக்கும் போது நான் வாட்ச் மேன் பொன்னுனு தெரியலியா? போலீஸ்காரரிடம் கற்பை பறிகொடுத்துவிட்டு கதறும் இளம் பெண்..!

காவல்துறை அதிகாரி ஒருவர் காதலித்து உல்லாசம் அனுபவித்த பின்னர் காதலியை கைவிட்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அயனாவரத்தில் ஏகாங்கிபுரம் என்னும் இடம் அமைந்துள்ளது. இன்று ஓய்வு பெற்ற சிறப்பு காவல் துறை ஆய்வாளரான விஜயகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் வீரமணி. இவர் ஆயுதப்படை பிரிவில் புதுக்கோட்டையில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

2017-ஆம் ஆண்டில் இவர் காவலருக்கான தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். அப்போது இவருடன் மற்றொரு பெண்ணும் பயிற்சி தேர்வுகள் எழுதியுள்ளார். அப்போதிலிருந்தே இருவருக்கும் நெருக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். வீரமணி தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இந்த பெண்ணை காதலிப்பதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

வீரமணி காவலராக தேர்ச்சி பெற்றார். ஆனால் அந்த பெண் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே திடீரென்று ஒருநாள் வீரமணியின் தந்தை பெண்ணின் வீட்டிற்கு சென்று, வீரமணி உதவி காவல் ஆய்வாளராக வருவதற்கு தேர்வுகள் எழுதி வருவதாகவும், தேர்வு முடிந்த பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்துபோன பெண் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்திருந்தார். ஆனால் வீரமணி காவல்துறை அதிகாரியாக இருப்பதால் நடவடிக்கை எடுக்காமல் புளியந்தோப்பு காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை அலைகழித்துள்ளனர்.

இதனால் அந்த பெண் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மற்றொரு புகார் மனுவாக எழுதி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.