குழந்தை எடை குறைவாக பிறந்த காரணத்தினால் ஒரு வாய் பால் கொடுக்க ஒன்றரை மணி நேரம் தவித்ததாக பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக ரசிகர்களை கவர்ந்த கிருத்திகா கூறியுள்ளார்.
குழந்தைக்கு ஒரு வாய் பால் கொடுக்க ஒன்றரை மணி நேரம் தவிப்பு! பூவே பூச்சூடவா நடிகையின் தாய்மை தாகம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் எனும் ரியாலிட்டிஷோ நடைபெறுகிறது. இதில் நடிகை கிருத்திகா தனது மகள் ஸ்ரீகாவுடன் இணைந்து கலந்து கொண்டுவருகிறார். நிகழ்ச்சியில் ஸ்ரீகா ஆடும் ஆட்டத்திற்கு அவ்வளவு ரசிகர்கள் உண்டு.
ஆனால் ஸ்ரீகா பிறந்த போது நடைபெற்ற துயரங்களை கிருத்திகாகூறிய போது கேட்போர் கண்களில் கண்ணீர் வந்தது. நான் கர்ப்பமா இருக்கும் தகவல் தெரிந்ததுமுதலே ரெகுலராக செக் அப் சென்றுவிடுவேன். அப்படி சென்ற போது ஒரு நாள் குழந்தை மிகவும்வீக்காக இருப்பதாக டாக்டர் கூறினார்.
இதனை அடுத்து வேறு ஒரு டாக்டரை பார்த்த போது அவரும் அதையேகூறினார். மேலும் குழந்தை பிறந்த பிறகு செய்ய வேண்டிய விஷயங்களை கூறி என்னை அப்போதுமுதலே தேத்த ஆரம்பித்தனர். இந்த நிலையில் 7வது மாத ஸ்கேன் எடுத்தேன்.
ரிப்போட்டை பார்த்த டாக்டர் குழந்தையை உடனடியாக வயிற்றில்இருந்து எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். நான் அப்போது குழந்தை பெற்றுக் கொள்ளமனதளவில் தயாராகவில்லை. ஆனால் குழந்தை பத்திரமாக பிறக்க சிசேரியன் அவசியம் என்றார்கள்.
அதன்படி அன்று இரவே எனக்கு குழந்தை பிறந்தது. ஆனால் நான்சுயநினைவுக்கு வர ஒரு நாள் ஆனது. அதன் பிறகு என் குழந்தையை என்னிடம் காட்டியே போதுஎனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. குழந்தை வெறும் 780 கிராம் தான் இருந்தது.
மற்ற குழந்தைகளை பார்த்துவிட்டு என் குழந்தையை பார்த்த போதுஎனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கும். இதை விட கொடுமை என்ன என்றால் குழந்தைக்கு பாலூட்டுவதுதான். குழந்தைக்கு நேரடியாக பிரஸ்ட் பீட் பண்ண முடியாது.
இதனால் எனது மார்பகத்தில் இருந்த ஒரு கருவி மூலம் தாய்ப்பாலைஉறிஞ்சி அதனை என் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இப்படி 15 மில்லி அதாவது ஒரு வாய்பால் கொடுக்க ஒன்றரை மணி நேரம் நான் தவிக்க வேண்டும். ஒரு முறை பால் கொடுத்துவிட்டுஅப்போது தான் ஆசுவாசப்படுவேன். அதற்குள் அடுத்த முறை பால் கொடுக்கும நேரம் வந்துவிடும்.
மீண்டும் அதே கருவியில் எனது மார்பகத்தில் இருந்து பாலை உறிவார்கள்,பின்னர் குழந்தைக்கு கொடுப்பார்கள். இப்படியே நான்கு மாதம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.ஆனால் என் குழந்தை ஸ்ரீகா அதன் பிறகு தேறி வந்தார்.
என் குழந்தைக்காக எனது உடல் எடையை அதிகரித்தேன். சுமார்100 கிலோ வரை நான் இருந்தேன். அதன் பிறகு ஸ்ரீகா நார்மல் ஆன பிறகு தான் எடையை குறைத்துதற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். என்று முடித்தார்.
இடை இடையே ஸ்ரீகா கண் கலங்க பார்த்தவர்களும் கண் கலங்கினர்.தாய்மை தவிப்பில் ஸ்ரீகா பட்ட கஷ்டம் நிச்சயம் யாருக்கும் வராது.