பிரபல நடிகை தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்வதற்கு தயாராக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மீண்டும் பழைய தொழில்..! கண்டுபிடித்து ஷாக் ஆன கணவன்..! அலட்டிக் கொள்ளாமல் விவாகரத்துக்கு தயார் ஆகும் தெத்துப்பல் நடிகை!

தெலுங்கில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வண்ணங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் தெத்துப்பல் நடிகையாவார். அவருக்கு அழகே அவருடைய தெத்துப்பல் தான் என்று பலரும் கூறுவது வழக்கம். பின்னர் அவர் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தெலுங்கு ரசிகர்கள் அவரை உற்சாகமாக ஏற்றுக் கொண்டதன் விளைவாக தமிழ் சினிமாவிலும் நடிக்க வந்தார். தமிழ் சினிமாவில் அவர் நடித்த முதல் படமே ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த பல திரைப்படங்களுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்க ஆரம்பித்தது.
நடிகை தமிழிலிருந்து மலையாள சினிமாவின் நடிப்பதற்கு சென்றார். தெலுங்கு மற்றும் தமிழைவிட மலையாள சினிமாவில் நடிகைக்கு மிக உற்சாகமான வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் கிடைக்க ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து நடிகைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பதற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.
பிஸியாக சென்று கொண்டு இருந்தபோது வாழ்க்கையில் காதல் எட்டிப் பார்க்கத் துவங்கியது. கடவுள் தேசத்தை பூர்விகமாக கொண்டவர் இந்த நடிகையின் காதலன். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே உடனடியாக இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்து நிம்மதியாக சென்றுக்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென புயல் வீசத் தொடங்கியுள்ளது. நடிகைக்கும் அவரது காதல் கணவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் வரத் துவங்கி உள்ளதாம்.
இந்த தெத்துப்பல் நடிகை சினிமாவில் நடிப்பதற்கு காதல் கணவரின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பெரிய போராட்டமே நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெறுப்பான அந்த நடிகை, தன் காதல் கணவரை விட்டு பிரிந்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இருவரும் விவாகரத்து பெற்று விடுவார்கள் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.