முதல் குழந்தையை வளர்க்கும்போது தாய்க்கு ஏராளமான சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கும். ஒருசில பிரச்னைகளுக்கு உடனே மருத்துவரை சந்திக்க வேண்டுமா அல்லது தானாகவே சரியாகிவிடுமா என்று தெரியாமல் விழிப்பார்கள்.
கர்ப்பிணிகள் டாக்டரை சந்திக்க சரியான நேரம் எது தெரியுமா?
·
குழந்தை தொடர்ந்து பால் குடிக்க
மறுக்கிறது அல்லது பால் குடித்தவுடன் வாந்தி எடுக்கிறது என்றால்…
·
மூச்சுவிட சிரமப்படுகிறது அல்லது
கை, கால், உதடு நீல நிறத்துக்கு மாறுகிறது என்றால்…
·
தொப்புள் அல்லது பிறப்புறுப்பு போன்ற
பகுதிகளில் ரத்தக்கசிவு தென்பட்டால்…
·
கண்களில் தொடர்ந்து நீர் வடிதல்,
உடலில் ஏற்பட்ட கொப்பளம் உடையாமல் இருத்தல்…
இவை தவிர, காய்ச்சல் குறையாமல் அதிகரித்துக்கொண்டே
இருந்தால் அல்லது உடல் மிகவும் குளிர்ந்த நிலையில் நீண்டநேரம் இருந்தால், உடனடியாக
மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.