இந்தியன் 2 படத்தில் இருந்து தயாரிப்பாளர் விலகல்! அதிர்ச்சியில் ஷங்கர்!

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து அதனுடைய தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார் . இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் காஜல்அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் போன்றோர் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை ஏ. எம் . ரத்னம் தயாரிக்கும் உள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. ஆனால் தற்போது தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இந்த திரைப்படத்தை விட்டு வெளியேறியதாக அதிர்ச்சிகர தகவல்கள் கூறப்படுகிறது.


இந்தியன் 2 திரைப்படம் இந்தியன் 1 திரைப்படத்தை தொடர்ந்து எடுக்கப்படுகிறது . இந்தியன் 1 திரைப்படத்தை ஏ .எம் . ரத்னம் தான் தயாரித்திருந்தார் ஆகையால் இந்த திரைப்படத்தையும் அவர்தான் தயாரிக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென்று திரைப்படத்தை விட்டு விலகுவதாக கூறப்படும் தகவல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதாவது ஏ. எம். ரத்னம் தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தின் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் .இதில் பிஸியாக பணியாற்றி வருவதால் இந்தியன் 2 திரைப்படத்தை தன்னால் தயாரிக்க இயலாது என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேட்ட இயக்குனர் ஷங்கர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது .