மோடிக்கு ராமர், கெஜ்ரிவாலுக்கு அனுமன்… ரணகளமாகும் தேர்தல் பிரசாரம்.

பிரதமர் மோடி எல்லா இடங்களிலும் ராமர் கோயில் கட்டியதை ஒரு சாதனையாகவும், ராமர் கோயிலை இண்டியா கூட்டணித் தலைவர்கள் யாருமே மதிக்கவில்லை என்றும் தொடர் தாக்குதலைத் தொடுத்துவருகிறார். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ‘அனுமன் என்னை வெற்றி பெற வைப்பார்’ என்று போட்டி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து வெள்ளிகிழமை வெளியே வந்தார். அவர் இன்று மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து கேஜ்ரிவால் இன்று ரோடு ஷோ நடத்தவிருக்கிறார். டெல்லி முதல்வருடன் சவுரப் பரத்வாஜ், அதிஷி, கோபால் ராய் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் உடனிருந்தனர்.

தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் மாலை 4 மணிக்கு ரோடு ஷோ மேற்கொள்கிறார். அதோடு, மாலை 6 மணிக்கு கிழக்கு டெல்லி கிருஷ்ணா நகரில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். கேஜ்ரிவாலின் பிரச்சாரத்தை கட்டுப்படுத்தவே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி விமர்சித்த நிலையில் இன்று முதல் அவர் முழுவீச்சில் பிரச்சாரம் செய்யவிருப்பது கவனிக்கத்தக்கது.

ராமரா அனுமனா என்று பட்டிமன்றப் போட்டி ஆரம்பமாகிறது.