என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 18
கள ஆய்வு செய்வதில் ஒரு புதுமை
பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே சரியான நேரத்தில் விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார்கள். எல்லோரைக்கும் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, தாங்கள் ரொம்பவே பிஸி என்பது போல் காட்டிக்கொண்டு, பரபரப்பாக வந்து தங்கள் முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்துவார்கள்.
அதேபோல், எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் சொந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மீதமிருக்கும் நேரத்தை மட்டுமே பொது சேவைக்கு ஒதுக்குவார்கள். அவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்றாலும் அதை அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பார்க்க வேண்டும், கலந்துகொண்ட செய்தி பத்திரிகைகளில் வரவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு செயல்படுவார்கள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்டவராக இருந்தார் சைதை துரைசாமி.
கள ஆய்வில் புதுமை
தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மேயர், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆகியோர் அவ்வப்போது கள ஆய்வு செய்வது எல்லா காலங்களிலும் வழக்கமாக நடக்கும் விஷயம்தான். பொதுவாக மழைக் காலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி நிற்கும்போது, மீடியாக்கள் மற்றும் பத்திரிகைகளின் விமர்சனத்திற்கு பயந்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வார்கள். பொதுவாக பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வ்ரையிலுமே ஆய்வு செய்வார்கள். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் மாநகர அலுவலர்கள், ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் உடன் இருப்பார்கள்.
மேலும் இந்த நேரத்தில் பொது மக்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருப்பார்கள். எனவே, மக்கள் கூட்டத்திற்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டால் நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும். எனவே கள ஆய்வு நேரத்தில் மக்களை பெரிய கூட்டமாக நிறுத்திக்கொண்டு, அவர்கள் கண் முன்பு ஊழியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு விரட்டவும் மிரட்டவும் செய்வார்கள்.
சைதை துரைசாமி இதே பணியை ஒரு புதுமையான வழியில் செய்யத் தொடங்கினார்.
- நாளை பார்க்கலாம்.