சைதை துரைசாமியின் முதல் நாள் அதிரடி நடவடிக்கை

சைதை துரைசாமியின் பதவியேற்பு விழா ஜெயலலிதாவின் வருகையினால் சிறப்படைந்தது. மாமன்ற விழாவில் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மற்ற மேயர்களைப் போன்று சைதை துரைசாமியும் பகுதி நேர மேயராகவே செயல்படுவார் என்று அதிகாரிகள் நினைத்தார்கள்.


சைதை துரைசாமியின் பதவியேற்பு விழா ஜெயலலிதாவின் வருகையினால் சிறப்படைந்தது. மாமன்ற விழாவில் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மற்ற மேயர்களைப் போன்று சைதை துரைசாமியும் பகுதி நேர மேயராகவே செயல்படுவார் என்று அதிகாரிகள் நினைத்தார்கள்.

ஆனால், விழா முடிந்ததும் முதல் நாளே மேயர், கள ஆய்வு செய்யப்போகிறார் என்று தகவல் சொல்லப்பட்டது.

கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக ஆய்வுசெய்து அகற்ற வேண்டும் என்று மண்டலகுழுத் தலைவர் எல்.ஐ.சி.மாணிக்கம் வைத்த கோரிக்கையை ஏற்று, மேயரும் மாநகராட்சி அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கிளம்பினார்கள். பத்திரிகையாளர்களும் பின் தொடர்ந்தனர்.

‘புது மாப்பிள்ளை ஜோராக, மேயர் முதல் நாளில் சுறுசுறுப்பாக இருக்கிறார், போகப்போக மந்தமாகி விடுவார்’ என்று ஒருவர் கமென்ட் அடிக்க… வெடிச் சிரிப்பு கிளம்பியது.

‘சைதை துரைசாமி எப்பவுமே சுறுசுறுப்புங்க, பதவியில் இல்லை என்றாலும் தொகுதிகளில் ஆய்வு நடத்துவார்’ என்று அவரது ஆதரவாளர் சொன்னதை யாரும் அப்போது நம்பவில்லை.

ரங்கராஜபுரத்தில் தேங்கிகிடந்த மழைத் தண்ணீருக்குள் வேட்டியை மடித்துக்கொண்டு மேயர் களம் இறங்கியதால், மற்றவர்களும் இறங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அங்கு தேங்கியிருந்த நீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் மளமளவென ஏற்பாடு செய்தனர். அங்கு மீண்டும் தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து விரைவில் பராங்குசபுரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வடிகால்வாய்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பின்னர் 6.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அன்று மேற்கொண்ட முயற்சி காரணமாக, அஜீஸ் நகர், ரங்கராஜபுரம், கார்ப்பரேஷன் காலனி, விஸ்வநாதபுரம், ரயில்வே பார்டர் போன்ற பகுதிகளுக்கும் மழைக்கால நீர்த் தேக்கத்தில் இருந்து விடிவு ஏற்பட்டது.