ஐ.டி. பார்க்கை விற்று மனிதநேய அறக்கட்டளை

மேயர் தேர்தலில் சைதை துரைசாமி மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததற்கு மனிதநேய அறக்கட்டளை மூலம் அவர் செய்த சேவைகள் முக்கியப் பங்கு வகித்தன.


மேயர் தேர்தலில் சைதை துரைசாமி மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததற்கு மனிதநேய அறக்கட்டளை மூலம் அவர் செய்த சேவைகள் முக்கியப் பங்கு வகித்தன.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கூறிய அறிவுரையின் படி, சேவையைப் பிரதானப்படுத்திய பொதுவாழ்க்கையை மேற்கொண்டார். இதற்காக சொந்த நிதியில் இருந்து மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மையத்தைத் தொடங்கினார். இதற்காக எந்த ஒரு நபரிடம் இருந்தும் அவர் நன்கொடை பெறவில்லை, யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதும் இல்லை. தமிழகத்தில் முதன்முதலில் தனியார் மென்பொருள் பூங்கா எனப்படும் ஐ.டி. பார்க்கை பெருங்குடியில் சைதை துரைசாமி உருவாக்கினார். மாதம் 50 லட்சத்துக்கும் மேல் வாடகை வந்துகொண்டிருந்த அந்த இடத்தை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை வைத்தே இன்று வரை மக்களுக்கும் மாணவர்களுக்கும் சேவை செய்துவருகிறார்.

தகுதியும் திறமையும் உள்ள மாணவர்கள் அரசு பதவிகள் அடைவதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஜாதி, மதம், இன பாகுபாடு பாராமல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கினார்.

முதலில் 100 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட மனிதநேய ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் மூலம் கட்டணமில்லாமல் படிக்கிறார்கள். மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ். தேர்வுகள் மட்டுமின்றி டி.என்.பி.எஸ்.சி. மற்றும் நீதித்துறையால் நடத்தப்படும் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஐ.ஏ.எஸ். தேர்வில் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு விமான டிக்கெட், உடை, டெல்லியில் பயிற்சி போன்ற எல்லாமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரை மனிதநேய மையத்தில் இருந்து சுமார் 3700க்கும் மேற்பட்ட மாணவர்களை அரசு உயர் பதவிகளுக்கும் சுமார் 36 ஆயிரம் மாணவர்களை மற்ற பணிகளுக்கும் அனுப்பியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதுவரை 170 சாதிப் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு அரசுப் பதவி கிடைப்பதற்கு உதவி செய்திருக்கிறார். , மீதமுள்ள அனைத்து சாதியினரும் அரசு பதவியில் பங்கேற்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இயங்கிவருகிறார்.

அவரது சேவை எந்த அளவுக்கு தமிழகம் முழுக்க பரவியிருந்தது என்பதற்கு சென்னை மாநகராட்சியே உதாரணமாகத் திகழ்ந்தது. எப்படி என்றால், சைதை துரைசாமி மேயராக பதவி வகித்தபோது, அவருடன் பணியாற்றிய இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 2 டெப்டி கலெக்டர்கள், அவது மனிதநேய அறக்கட்டளை மூலம் படித்து பதவிக்கு வந்தவர்களாக இருந்தார்கள். அதேநேரம், தன்னுடைய மாணவர் என்பதற்காக எந்த ஒரு நபரிடமும் எந்தவொரு உரிமையும் எடுத்துக்கொள்ள மாட்டார். அது தான் சைதை துரைசாமியின் தனிச்சிறப்பு.