கோவிலுக்கு வந்த பக்தர்கள்! உட்கார வைத்து தலையில் கால் வைத்த பூசாரி! அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசா மாநிலத்தில் பக்தர்களின் தலையில் காலை வைத்து ஆசீர்வாதம் செய்த சாமியாரின் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


ஒடிசா மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் கான்பூர் என்ற இடம் அமைந்துள்ளது இந்த இடத்தில் இருசக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை செய்வதற்காக அங்கிருந்த தொழிலாளர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ராமச்சந்திர சமந்தராய் என்ற சாமியார் வந்திருந்தார். அவர் அங்கிருந்த மக்களுக்கு தன்னுடைய காலால் ஆசிர்வாதம் செய்துள்ளார். இந்த சாமியார் பக்தர்களின் தலையின் மீது தன்னுடைய காலை வைத்து ஆசீர்வாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.