சமந்தா தன்னுடைய கணவரின் மற்றொரு முகத்தை பற்றி பகிரங்கமாக கூறியுள்ளார்.
என் கணவருக்கு நான் 2வது மனைவி..! திருமணத்திற்கு பிறகு தான் தெரிந்தது..! சமந்தாவின் ஷாக் ஸ்டேட்மென்ட்!
நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திய நாயகி ஆவார். இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா கடைசியாக பேபி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இவர் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட காதல் கணவருக்கு முதல் மனைவி வேறு ஒன்று இருக்கிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறியிருக்கிறார் நடிகை சமந்தா.
அதாவது நாகசைதன்யா தினமும் தூங்கும் பொழுது தன்னுடைய தலையணையை கட்டிப்பிடித்து தான் உறங்குவார் . ஆகையால் தலையணை தான் தன்னுடைய முதல் பொண்டாட்டி என்று சொல்லுவாராம். ஒருவேளை நடிகை சமந்தா தனது கணவரை கட்டிப் பிடிக்க வேண்டுமென்றால் கூட தலையணை இடம் உத்தரவு கேட்க வேண்டும் என்று கேலியாகப் பேசினார் நடிகை சமந்தா.