இருட்டு அறையில் சவுக்கு சங்கருக்கு முரட்டுக் குத்து. அந்த 10 பேர் யார்?

இதனை விசாரித்த நீதிபதி, ‘உங்களுக்குத் தேவையான விசாரணையை ஆரம்பிக்கிறோம்’ என்று உறுதி கொடுத்த நிலையில், ‘இனி நான் யாருடைய மனம் புண்படும் வகையில் பேச மாட்டேன்’ என்று நீதிபதியிடம் உறுதி அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் வெளியே வந்தாலும், கஞ்சா வழக்கில் ஒரு போதும் வெளியே வர முடியாது என்கிறார்கள். அதேநேரம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, ஊட்டி என்று அவர் ஊர் ஊராக செல்லவே சரியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.


பெண் போலீஸாரை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கையில் அடிபட்டு, அதற்காக மாவுக்கட்டு போட்டிருக்கிறார். இது குறித்து நீதிபதியிடம் அவர் பேசிய விவகாரம் வெளியே வந்திருக்கிறது.

தன்னை இருட்டு அறையில் வைத்து 10 பேர் கண் மூடித்தனமாகத் தாக்கியதாகத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து காவல் துறையோ, ‘கைதிகளுக்குள் மோதல் நடந்திருக்கிறது. போலீஸ் இதில் சம்பந்தப்படவில்லை’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.

இதனை விசாரித்த நீதிபதி, ‘உங்களுக்குத் தேவையான விசாரணையை ஆரம்பிக்கிறோம்’ என்று உறுதி கொடுத்த நிலையில், ‘இனி நான் யாருடைய மனம் புண்படும் வகையில் பேச மாட்டேன்’ என்று நீதிபதியிடம் உறுதி அளித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் அவர் வெளியே வந்தாலும், கஞ்சா வழக்கில் ஒரு போதும் வெளியே வர முடியாது என்கிறார்கள். அதேநேரம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, ஊட்டி என்று அவர் ஊர் ஊராக செல்லவே சரியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அந்த 10 பேர் யார் என்று போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, ‘நிஜமாகவே போலீஸ் இல்லை’ என்கிறார்கள். அப்படியென்றால் யார் அந்த பத்து பேர்?