தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள 4வது கட்ட ஊரடரங்கில் கிரிக்கெட் மைதானங்கள் உட்பட பல விளையாட்டு அரங்கங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
4வது ஊரடங்கில் கிரிக்கெட் மைதானங்களை திறக்க அனுமதி! விரைவில் தொடங்ககிறது ஐபிஎல்! ஆனால்?
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகிறது. தற்போது மத்திய அரசு மே மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த நான்காவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கில் விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஸ்டேடியங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரங்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கின் பொழுது எவ்வாறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகையால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? நடைபெறாதா? என்று சந்தேகத்தில் இருந்து வருகின்றனர். நான்காம் கட்ட ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் இந்த ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த தளர்வு காலத்திலும் சர்வதேச பயண கட்டுப்பாடுகள் மற்றும் உள்ளூர் விமான பயணக் கட்டுப்பாடுகள் நிலவி வருவதால் கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்து பங்கேற்க முடியாத நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பயணக் கட்டுப்பாடுகள் தடையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.