மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பெருமிதப்பட்டுள்ளார்.
நான்காவது ஆண்டில் ஸ்டாலின் ஆட்சிக்கு உதயநிதி பெருமிதம்
மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பெருமிதப்பட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 - விடியல் பேருந்து பயணம் - மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம் - முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் - மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் - நான் முதல்வன் - விவசாயிகளுக்கென தனி வேளாண் நிதி நிலை அறிக்கை - விளையாட்டுத்துறையில் புதுப்பாய்ச்சல் - ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொழில்துறை திட்டங்கள் - கலைஞர் நூற்றாண்டு நூலகம் - கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை - கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகளை செய்து வெற்றி நடைபோடுகிறது.
நம் தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் - ஒவ்வொரு மனிதரும் பயன்பெற வேண்டுமென்ற உயரிய லட்சியத்தோடு செயல்பட்டு வரும் நம், கழக அரசின் சாதனைகளை போற்றுவோம். நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, வரவிருக்கிற நாட்களில் இன்னும் அயராது உழைப்போம்’ என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக நான்காவது ஆண்டு பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில், முத்துவேல் கருணாநிதி எனும் நான் உங்களின் நல்லாதரவையும், நம்பிக்கையையும் பெற்று நம் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறேன். இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் நான் செய்து கொடுத்த திட்டங்கள் நன்மைகள் என்னென்ன என்பது தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட பயனடைந்த மக்களே செல்வதுதான் உண்மையான பாராட்டு.
எப்போதும் நான் சொல்வது இது எனது அரசு அல்ல நமது அரசு. நமது அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும் மாநிலமும் பயன்பெற எந்நாளும் உழைப்பேன் என்று உறுதியேற்று ஆட்சிப் பயணத்தை உங்கள் வாழ்த்துகளுடன் தொடர்வேன்’ என்று கூறியிருக்கிறார்.